• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காலத்தின் கட்டாயமாக முதல்வரான எடப்பாடி பழனிசாமி தவறிழைத்து வருகிறார் - இயக்குநர் அமீர்

காலத்தின் கட்டாயமாக முதல்வரான எடப்பாடி பழனிசாமி தவறிழைத்து வருகிறார் - இயக்குநர் அமீர்

  • News18
  • Last Updated :
  • Share this:
CAA, NRC & NPR-க்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இயக்குனர் அமீர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் பேசிய இயக்குனர் அமீர், "ஆறு ஆண்டுகளாக இந்தியா சர்வாதிகார ஆட்சியின் கீழ் உள்ளது. இதுவரை களத்திற்கு வராத இசுலாமிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, வரலாற்றில் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்கும் போது நாட்டை, அரசியலமைப்பை காப்பேன் என்று உறுதிமொழி ஏற்றும் அதைக் காக்கவில்லை. நாட்டு மக்களும், குறிப்பாக இசுலாமிய மக்கள் தான் அரசியலமைப்பை காத்து வருகின்றனர்.

காலத்தின் கட்டாயமாக முதல்வராக வந்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தவறிழைத்து வருகிறார். அதை திருத்தி கொள்ள காலவகாசம் கொடுத்தும், அதனை அவர் திருத்தி கொள்ளவில்லை. இந்த போராட்டம் எதிர்க்கட்சிகளால் தூண்டிவிட்டப்பட்டவை அல்ல, தங்கள் எதிர்காலத்தை நினைத்து மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தலைவியாக ஏற்றுக்கொண்ட ஒருவரையே இரண்டு நாட்களில் ஜெயிலுக்கு அனுப்பிய நீங்கள், வாய் வார்த்தையாக கூறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். சட்டமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 16 நாட்களாக அமைச்சர் ஜெயக்குமார் இந்த பகுதிக்கு வரவும் இல்லை, மக்களுக்கு ஆதரவும் அளிக்கவில்லை

இப்பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் தான் ஆளும் அரசு இப்பகுதிக்கு வருவார்களா? இறைவன் என்ன நினைக்கிறான் என்று தெரியவில்லை. இப்பகுதிக்கு இடைத்தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: