சீர்காழியில் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை சார் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

சீர்காழி அருகே கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு கடன் அட்டை வழங்க லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை, சார் ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீர்காழியில் லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை சார் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு
மீன்துறை சார் ஆய்வாளர் அலுவலகம்
  • News18
  • Last Updated: September 9, 2020, 6:21 PM IST
  • Share this:
பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடனை வாங்குவதற்கு மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை மீன்துறை சார் ஆய்வாளர்  பரிந்துரை செய்வார். பரிந்துரை செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இதனை மீனவர்கள் பெற்று பயனடைவர்.

இந்நிலையில் சீர்காழி மீன்துறை அலுவலகத்தில் சார் ஆய்வாளராக பணியாற்றும் சங்கர், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் கடன் அட்டை வழங்க பரிந்துரை செய்வதற்கு அட்டை ஒன்றுக்கு ரூபாய் 100 லஞ்சம் கேட்பதாகவும், கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 500 பேர் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க உள்ளதாகவும், நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.Also read... சாஃப்ட்வேர் நிறுவன ஊழியர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை...


அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கடன் அட்டை வழங்குவதற்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் 162ம் அதற்கு உண்டான லஞ்ச தொகை 18,080 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.

கடன் அட்டை வழங்க லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக மீன்துறை சார் ஆய்வாளர் சங்கர் மீது நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: September 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading