ஆர்.டி.ஐயின் கீழ் மத்திய நீர்வளத்துறையிடம் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில்: தலைவர்கள் கண்டனம்

மத்திய நீர்வளத்துறையிடம் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில் வந்திருப்பதற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆர்.டி.ஐயின் கீழ் மத்திய நீர்வளத்துறையிடம் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் பதில்: தலைவர்கள் கண்டனம்
பெ.மணியரசன்.
  • Share this:
காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு இருக்கின்றனவா என அறிந்துகொள்ளவும், நடப்பு சாகுபடி ஆண்டில் ஜுன் – ஜுலை மாதங்களுக்குரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளதா என்ற தகவலைப் பெறவும் காவிரி மீட்புக் குழு முயன்றுள்ளது.

Also read: குடியாத்தம்: பரோடோ வங்கி ஏடிஎம்-மில் தமிழ்மொழி நீக்கம்: ஆங்கிலம், இந்தி தெரியாத மக்கள் அவதி..

இதுகுறித்து மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கடந்த 16.07.2020 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 8 கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். இதற்கு பதில் தரும் வகையில், மத்திய நீர்வளத் துறையிலிருந்து வந்த கடிதங்கள் முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே உள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.


இந்திய அரசமைப்புச் சட்டம் உறுப்பு 343 ( 2 )-இன்படி இந்திய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடர்கிறது. உறுப்பு 343 (3)-இன்கீழ் 1963இல் இயற்றப்பட்ட இந்திய அரசின் அலுவல் மொழிச் சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, ஆங்கிலம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்குமிடையே தொடர்ந்து தொடர்பு மொழியாக நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் மாநில அரசின் அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் இருக்கின்றன.

இந்நிலையில், தமிழ்நாட்டிலிருந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு இந்தியில் விடை வந்ததற்கு பெ.மணியரசன் உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
First published: September 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading