போக்குவரத்து விதி மீறல்களை தடுப்பதற்காக சென்னை முழுவதும் அதிநவீன ANPR கேமராக்கள் பொருத்தப்படும். - காவல் ஆணையர்

காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை அண்ணாநகர் ரவுண்டானவில் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து புறக்காவல் நிலையம் மற்றும் ANPR அதி நவீன கேமராக்கள் உட்பட 64 நவீன சிசிடிவி கேமராக்களை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார்.

  • Share this:
வாகன ஓட்டிகள் சிக்னலில் Red line,Stop line  அதிவேகமாக செல்லுதல் உள்ளீட்ட போக்குவரத்து விதிமீறல்களை மீறுவோர்களை ANPR (Automatic number plate Reading.)  என்ற சிசிடிவி கேமரா படம் பிடித்து அதன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையிலுள்ள காவலர்கள் மூலமாக செலான் அளிக்கும் முறையானது தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த முறையில் நேர விரயம் மற்றும் அதிக நபர்கள் பணி செய்யவேண்டி இருப்பதால் அதனை தவிர்ப்பதற்காக ANPR சிசிடிவி கேமராக்களில் PTZ (Pan Tilt and Zoom) மற்றும் RLVD (Red light violation Detection) ஆகிய தொழிநுட்பங்களை பயன்படுத்தி எளிமையாக கையாளக்கூடிய சிசிடிவி கேமராக்களை சென்னை காவல்துறை துவங்கியுள்ளது.

இந்த வகை சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கணினி வழியாக (NIC)தேசிய தகவல் மையம் மூலமாக சம்பந்தபட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுந்தகவல் கொடுத்துவிடும் மேலும் முகவரிக்கு செலான் அனுப்பி அபராதம் வழங்கப்படும். இதனால் ஒரு நாளைக்கு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து 1 லட்சம் வழக்குகள் வரை பதிவு செய்ய முடியும்.

Also Read : சட்டமன்ற தேர்தலில் கோட்டை விட்டாச்சு, ஆனால் உள்ளாட்சி தேர்தலில்... வியூகம் வகுத்த பழனிசாமி

முதற்கட்டமாக அண்ணா நகர் சிக்னலில் 4 அதி நவீன ANPR கேமராக்களும் 60 சிசிடிவி கேமராக்களும் பொறுத்தப்பட்டு இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜீவால் முதற்கட்டமாக அண்ணா நகர் ரவுண்டா, மாதாவரம் ரவுண்டானா ஆகிய பகுதிகளில் துவங்கியிருப்பதாகவும் விரைவில் சென்னை முழுவதும் துவங்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, மூன்று நபர்கள் செல்வது, சாலைகோட்டை கடந்து வாகனங்களை நிறுத்துவது, அதிவேகமாக செல்வது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Also Read : செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனம் நிலை என்ன? அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்

மேலும், சென்னையில் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் சி.சி.டி.வி கேமராக்களை அரசு நிதியுதவிபடி சரி செய்யப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எஸ்.பி.ஐ.ஏ.டி.எம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு ரூ.4.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் கொள்ளையர்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படையினர் ஹரியானவில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: