• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Lockdown Extended | தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி கட்டுப்பாடு!

Lockdown Extended | தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு; அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி கட்டுப்பாடு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  • Share this:
    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம்  நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தாலும், தொற்று பாதிப்புக்கு ஏற்றவாறு 3 வகைகளாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. அதில் வகை ஒன்றில் 11 மாவட்டங்களும், வகை 2ல் 23 மாவட்டங்களும், வகை 3ல் 4 மாவட்டங்களும் பிரிக்கப்பட்டன. இதில் வகை 1ல் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், தளர்வுகள் குறைவாக அளிக்கப்பட்டு வந்தன.

    இதைத்தொடர்ந்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 5ம் தேதி நிறைவடையும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவ அதிகாரிகள், வல்லுநர்களுடன், இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வாரம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, 5.07.21 முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகள் வழங்கப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

    மேலும், ஏற்கனவே இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    எதற்கெல்லாம் அனுமதி?

    காலை 6 - இரவு 8 மணி வரை ஓட்டல்களில் 50% இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடலாம்

    ஏற்கெனவே இரவு 7 மணி வரை அனுமதிக்கபட்டுள்ள கடைகள் 8 மணி வரை செயல்படலாம்

    தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி

    அரசு, தனியார் பொருட்காட்சிகள் நிகழ்வுகளுக்கு அனுமதி

    ஜிம், யோகா மையங்கள் 50% பேருடன் இயங்கலாம்

    துணிக்கடைகள், நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்

    அனைத்து வழிபாட்டுத் தலங்கள் நிலையான வழிகாட்டுமுறையுடன் இயங்கலாம்

    டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி - இரவு 8 மணி வரை செயல்படலாம்

    வணிக வளாகங்கள் காலை 9 மணி - இரவு 8 மணி வரை செயல்படலாம்

    பொழுதுபோக்குப் பூங்காக்களில் செயல்பட அனுமதி (நீர் விளையாட்டு தவிர)

    திருமண நிகழ்வுகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்

    இறுதிச்சடங்குகளில் 20 பேர் வரை பங்கேற்கலாம்

    மாவட்டத்திற்குள், மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு அனுமதி

    கல்லூரிகளில் ஆராய்ச்சி மாணவர்கள் கல்விப் பணியைத் தொடர முடிவு

    எதற்கெல்லாம் அனுமதி இல்லை?

    மாநிலங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு

    திரையரங்குகள், நீச்சல் குளங்கள், மதுக்கூடங்களுக்கும் தடை நீட்டிப்பு

    பள்ளிகள், கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் செயல்பட தடை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: