‘தினகரன் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை’ - அதிமுகவில் ஐக்கியமான எம்.எல்.ஏ. கலைச்செல்வன்

‘தினகரன் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை’ -  அதிமுகவில் ஐக்கியமான எம்.எல்.ஏ. கலைச்செல்வன்
எம்.எல்.ஏ. கலைச்செல்வன்
  • Share this:
ஆட்சியைக் கலைப்பேன் என தினகரன் கூறியதை ஏற்க முடியாததால் அதிமுகவிலேயே தொடர்ந்து செயல்பட முடிவு செய்ததாக முதலமைச்சரை சந்தித்த விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இனி முனைப்புடன் செயல்படுவேன் என உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விருதாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன் சந்தித்துப் பேசினார். அவருடன் ஜெயக்குமாரும் இருந்தார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கலைச்செல்வன், யார் உண்மையான அதிமுக என மக்கள் தேர்தலில் காட்டி விட்டதாக கூறினார்.



கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் சபாநாயகரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், கட்சியினருடன் தனக்கு கருத்து வேறுபாடு மட்டுமே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

First published: July 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading