சென்னையில் கொரோனா சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்...!

ராஜிவ்காந்தி மருத்துவமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

சென்னையில் கொரோனா சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் தப்பி ஓட்டம்...!
ராஜீவ் காந்தி மருத்துவமனை
  • Share this:
ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒருவர் நேற்று இரவு தப்பியோடியுள்ளார்.

கொரோனோ நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலிருந்து சிலர் கொரோனா சிகிச்சையில் இருக்கும்போது தப்பித்து செல்வதும் வாடிக்கையாகி வருகிறது.


இந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த அயனாவரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் நேற்றிரவு தப்பியோடியுள்ளார்.

ராஜிவ்காந்தி மருத்துவமனை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

இதே போல கோயம்பேடு மார்க்கெட்டின் கூலித் தொழிலாளியான சின்மயா நகரைச் சேர்ந்த 43 வயது நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி காலை அவர் மருத்துவமனையில் இருந்து தப்பித்து சென்று விட்டார். இந்த நபரை தேடும் பணியிலும் சுகாதாரதுறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த மாதம் 29ம் தேதி பள்ளிகரணையை சேர்ந்த 62 வயது நபர் ஒருவர் ராஜுவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் கடந்த 7 ம் தேதி நள்ளிரவில் கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்று விட்டதாக காவல் நிலையத்தில் மருத்துவர்கள் தெரிவித்தனர். மாயமான நபரை தேடும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், போலீசார்கள் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தப்பியோடிய நபர் அதிகாலையில் மீண்டும் வந்தார். டீ சாப்பிட போனதாகவும் டீக்கடைகள் இல்லை என்பதால் வேறொரு வார்டில் இருந்த நண்பரை பார்க்கபோனதாகவும் அங்கு அனுமதிக்காததால் மீண்டும் வந்து விட்டதாகவும் மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.

தொடர்ந்து இதுபோல ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் தப்பித்துச் செல்வது வாடிக்கையாகி வருகிறது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading