வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கைது செய்யப்பட்ட கண்ணன்

முன்னதாக 21பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று நுகர்பொருள் வாணிப கழகத்தில் கட்டுமான பிரிவில் தலைமை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 21பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ் மற்றும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், திருபெரும்புத்தூர் கார்த்திக் மற்றும் திரிபுராவை சேர்ந்த தெபாசிஸ் நாமா உட்பட 21பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், ,மேலும் இன்று நுகர்பொருள் வாணிப கழகத்தில் கட்டுமான பிரிவில் தலைமை செயலாளர், 53 வயதுடைய கண்ணன் என்பவ காவல்துறையினரால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

   

  மேலும் படிக்க.... சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை விவகாரம்.. ஓய்வுபெற்ற டிஎஸ்பி உள்ளிட்ட காவல் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் பலர் சிக்கியுள்ளதாக தகவல்

   

  சில மாதங்களுக்கு முன்னர், இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை 2 மாதங்களில் தினமும் பாலியல் தொழிலில் ஈடுபடவைத்து ஷாகிதா பானு, மதன் குமார் மற்றும் சந்தியா ஆகியோர் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக சந்தியா அரசியல் பிரமுகர்களின் ஆசைக்கிணங்க சிறுமியை ஈ.சி.ஆர் பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளுக்கு அனுப்பி வைத்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், அங்கு பல நபர்கள் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையும் தெரியவந்தது.

  இந்த வழக்கில் பாலியல் இடைத்தரகர்களாக செயல்ப்பட்ட ஷகிதா பானு, மதன் குமார், சந்தியா, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் ஆகியோரின் மொபைல் போனை ஆய்வுசெய்து பார்த்தபோது பல நபர்களிடம் இவர்கள் சிறுமியை வைத்து விலை பேசுவது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: