சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

வழக்கில் கைதானவர்கள்

விசாரணைக்குப் பின்னர் சந்திரதீப் சர்மாவை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னை சவுகார்பேட்டை யானை கவுனியில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்த தலீல் சந்த். அவரது மனைவி புஷ்பாபாய்,  மகன் ஷீத்தல்குமார் ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் 11-ம்தேதி  துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இது குறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் நேரில் ஆய்வு நடத்தி குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் புலன் விசாரணை செய்து கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரர்கள் கைலாஷ், விலாஷ், இவர்களது நண்பர்கள் ரபிந்தரநாத் கர், விஜய் உத்தம், ராஜு ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபே, ஆகிய 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கணவன் மனைவிக்குள் எழுந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கணவர் ஷீத்தல் குமாரிடம் அவரது மனைவி ஜெயமாலா மற்றும் ஜெயமாலாவின் சகோதரர்களான கைலாஷ் மற்றும் விலாஷ் ஆகியோர் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டியதும், பணம் தரததால் ஷீத்தல் மற்றும் ஷீத்தலின் குடும்பத்தார்களை கொலை செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து  2 துப்பாக்கிகள், 2 கார்கள், 1 இருசக்கர வாகனம், 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொலை சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு துப்பாக்கிகளில் ஒன்றான லைசென்ஸ் துப்பாக்கி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜூவ் துபேவுக்கு சொந்தமானது என்ற நிலையில், கள்ளதுப்பாக்கி கைலாஷுக்கு எப்படி கிடைத்தது? யார் கொடுத்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திரதீப் சர்மா என்பது தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மாநிலம் தோங்க் மாவட்டத்தில் முகாமிட்டு சந்திரதீப் சர்மாவை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜூவ் துபேவின் மூலம் கைலாஷுக்கு பழக்கமானவர் சந்திரதீப் சர்மா என தெரியவந்துள்ளது.

Also read... திருட்டு மொபைல் என்று தெரியாமல் வாங்கியதால் போலீஸ் வழக்கில் சிக்கிய இளைஞர் தற்கொலையில் திடீர் திருப்பம்

கைலாஷ், தானொரு வழக்கறிஞர் என்பதால் கொலை மிரட்டல் வருவதாகவும், அதனால் தற்காப்புக்காக கள்த்துப்பாக்கி வேண்டும் என்று சந்திரதீப் சர்மாவிடம் கூறியுள்ளார். சந்திரதீப் சர்மா கள்ளத்துப்பாக்கி சப்ளை செய்வதால், ரூ. 25 ஆயிரத்திற்கு கள்ளத்துப்பாக்கியை வாங்கி அதனை ரூ.50  ஆயிரத்துக்கு கைலாஷிற்கு விற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணைக்குப் பின்னர் சந்திரதீப் சர்மாவை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் ஜெயமாலா, அவரது சகோதர்கள் கைலாஷ், விலாஷ், இவர்களது நண்பர்களான விஜய் உத்தம், ராஜூ ஷிண்டே, ரபிந்தர்நாத்கர் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: