• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  •  விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது! -நாளை முக்கிய ஆலோசனை

 விரைவில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகிறது! -நாளை முக்கிய ஆலோசனை

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்

இன்னும் சில தினங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

  • Share this:
அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்தவுள்ள தேர்வுகள் குறித்து நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

ஆண்டுதோறும் 35-க்கும் மேற்பட்ட தேர்வுகளை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அரசு துறைகளில் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனோ  காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டப்படி  தேர்வுகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை குரூப்-1 தேர்வு, வேளாண்மை துறை தேர்வு மற்றும் உதவி வரைவு அதிகாரி பணியிடத்திற்கான தேர்வு ஆகிய மூன்று தேர்வுகள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கின்றன.

கொரொனோ நோய்த் தொற்று தற்போது குறைந்து வரக்கூடிய நிலையில் இந்த ஆண்டு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இந்த அடிப்படையில் நாளை அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேர்வுகள் குறித்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளது.

இந்த ஆலோசனையில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், செயலாளர் தேர்வு கட்டுப்பாட்டு துறை அலுவலர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கின்றனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் குரூப் 2, குரூப் 2ஏ ,குரூப் 4 ஆகிய முக்கிய தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து இன்னும் சில தினங்களில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பு மற்றும் காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: