ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை.. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர்

தலைமைச் செயலகம்

தமிழக பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 13-ம் தேதி முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூடிய அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அவை முன்னவர் துரைமுருகன்,  மூத்த அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, விசிக சார்பில் சிந்தனைச்செல்வன், பாஜக சார்பில் நைனார் நாகேந்திரன், பாமக ஜி.கே.மணி, மார்க்.கம்யூ நாகை மாலி, இந்திய. கம்யூ தளி ராமச்சந்திரன் அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இக்கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், ஆக.14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவெடுக்கபட்டுள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சேர்த்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது, அதன்படி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 20 நாட்களுக்கு மிகாமல் நடத்தப்படவேண்டும் என்பது சட்டப்பேரவை விதி.

Also Read : பழனிவேல் தியாகராஜனுக்கு சமூக பொருளாதாரம் தெரியாது - ஆர்.பி.உதயகுமார்

தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 4 நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது, நான்கு நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று இறுதிநாளான 19ஆம் தேதி நிதித்துறை அமைச்சர் பதிலுரை அளிக்கிறார்.

அரசு விடுமுறை மற்றும் ஞாயிறு கிழமைகழ் தவிர்த்து 29 நாட்கள் நடைபெற உள்ளது. மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23-ம் தேதி துவங்கி, செப்டம்பர் 21ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது . 24-ம் தேதி நகராட்சி, 25-ம் தேதி ஊரக வளர்ச்சி 26 கூட்டுறவு மற்றும் உணவு, 27 உயர்கல்வி, பள்ளிக்கல்வி, செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.

Also Read : எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை... ஏராளமான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள் பறிமுதல் - தகவல்

முதலமைச்சர் வசமுள்ள காவல்துறை மீதான மானியக் கோரிக்கைகள் செப்டம்பர் 18 மற்றும் 20 தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற உள்ளது. முன்னதாக செப்டம்பர் மாதம் நான்காம் தேதி முதலமைச்சர் வசம உள்ள மாற்று திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 29 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் நடைபெறும் அலுவலக நாட்களில் காலை 10.00 மணிக்கு அவை தொடங்குகிது.

இம்முறை தமிழகத்தில் முல்முறையாக காகிதமில்லாத இ- பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது இதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் கணினி வைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தனித்தனியே கையடக்க டாப் கொடுக்கப்படுகிறது. அதற்கான பயிற்சியும் அனைத்து சட்டமன்ற உறுப்பினருக்கும் பயிற்சி வழங்குவதற்கு சட்டப்பேரவை செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: