தமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திருச்செந்தூர் முருகன் கோவில்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 • Share this:
  கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் கோவில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை பிறிப்பித்துள்ளது .

  தமிழகத்தில் தொடர்ந்து கொனேரானா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

  இந்நிலையில் கோயில்களில் திருமணம் நடத்த புதிய கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கோயில்களில் நடைபெறும் திருமணத்தில் 10 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. கோயில் மண்டபங்களில் திருமணம் - 50 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும்.

  மேலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திருக்கோவில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: