• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய விவரம் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய விவரம் அறிவிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான 3.1% இடங்களின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
    நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்ததிலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் கடந்த 6 மற்றும் 9 தேதி களிலும், 28 மாவட்டங்களில் காலியாக இருந்த ஊரக உள்ளாட்சி பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் 9ஆம் தேதியும் நடைபெற்றது. 10, 11 தேதிகளில் ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவும் நடைபெற்றது.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. பெரும்பாலான இடங்களில் முடிவுகள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சிகள் கைப்பற்றிய இடங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரத்தை மாநில தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    அதன்படி, மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுக 89.54%, அதிமுக 1.31%, காங்கிரஸ் 5.23%, மற்றவர்கள் 1.96% இடங்களை பிடித்துள்ளதாகவும், 1.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளைப் பொறுத்தவரை, திமுக 68.26%, அதிமுக 14.85%, காங்கிரஸ் 2.32%, பாஜக 0.56%, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0.28%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.21%, தேமுதிக 0.07% இடங்களையும், மற்றவர்கள் 12.46% இடங்களையும் கைப்பற்றி உள்ளதாகவும், 0.91% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Must Read : கடிதம் எழுதிய 6ம் வகுப்பு மாணவிக்கு போன் செய்த முதல்வர் ஸ்டாலின்!

    கிராம ஊராட்சி தலைவர் பதவிகளில் 99.2% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 0.96% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளைப் பொறுத்தவரையில் 97.01% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், 3.1% இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: