ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது
காங்கிரஸ், தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று காலை ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரை கழக வேட்பாளராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.
இவ்விழாவில் பேசிய முன்னாள் அமைச்சர்கள் எம்.ஜி.ஆருக்கு திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலை போல் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் என்று தெரிவித்தனர். இதில் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் தென்னரசு, அதிமுக ஆட்சியில் மட்டுமே ஈரோடு தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாகவும், வெற்றி பெற்றால் கிழக்கு தொகுதிக்குப்பட்ட பகுதியில் வீடு உள்ளதால் எந்நேரமும் பொதுமக்கள் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம் என்றும், என் வீட்டில் வாட்மேனும் கிடையாது, நாயும் கிடையாது. எனவே எப்போது வேண்டுமானலும் பொதுமக்கள் என்னை சந்திக்கலாம் என்றார்.
யார் இந்த தென்னரசு?
ஈரோட்டில் ஸ்கிரீன் பிரின்டிங் பட்டறை நடத்தி வரும் கே.எஸ்.தென்னரசு 1992ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர். 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த ஜெயலலிதா ஈரோடு தொகுதியில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று எம்எல்ஏவானார். 2016ஆம் ஆண்டு ஈரோடு கிழக்குத் தொகுதியில் வெற்றிபெற்று 2வது முறையாக எம்எல்ஏவானார். 2021 தேர்தலில் கூட்டணி கட்சியான தமாகா வேட்பாளர் யுவராஜாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்தார். அதிமுக ஆளும்கட்சியாக இருந்த காலங்களில் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்தவர். அதிமுகவினருக்கும் அப்பகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவார் கே.எஸ்.தென்னரசு என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi Palaniswami, Erode, Erode Bypoll, Erode East Constituency