Home /News /tamil-nadu /

ஆதிபராசக்தியின் அவதாரம் என நான் கூறவில்லை, எனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர் - அன்னபூரணி

ஆதிபராசக்தியின் அவதாரம் என நான் கூறவில்லை, எனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர் - அன்னபூரணி

அன்னபூரணி

அன்னபூரணி

ஆதிபராசக்தியின் அவதாரம் என தான் கூறவில்லை, தனது ஆன்மீகத்தை உணர்ந்தவர்கள் கூறுவதாக பெண் சாமியார் அன்னபூரணி அரசு காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக சர்ச்சையை ஏற்படுத்தி வரும் பெண் சாமியாரான அன்னபூரணி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மீக தீட்சை கொடுத்து பயிற்சி வகுப்புகளை நடத்தி வருவதாகவும், செங்கல்பட்டு பகுதியில் ஆன்மீக பயிற்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு நல்ல முறையில் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து 24ஆம் தேதி பல யூடியூப் சேனல்களிலும், தொலைக்காட்சிகளிலும் தன்னை பற்றியும் தனது ஆன்மீக சீடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் வீடியோ பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும் தனது கணவர் மாரடைப்பால் இறந்ததை சந்தேக மரணம் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருவதாகவும், ஆன்மீக சேவையில் ஈடுபட கூடாது என தொலைபேசி மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனக்கும், தனது சீடர்களுக்கும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை இருப்பதாலும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்னபூரணி, சமூகவலைதளங்களில் கடந்த சில நாட்களாக தன் மீது அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், இது குறித்து புகார் அளிக்க காவல் ஆணையர் வந்துள்ளதாக அவர் கூறினார். போலி சாமியார் என சிலர் கூறி பொய்யாக கூறி வருவதாகவும், ஆன்மிக பணி செய்வதற்காக வந்ததாகவும் பார்ப்பவர்களுக்கு தன்னை பற்றி தெரியாது , உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவுன் தெரிவித்துள்ளார். சாமியார் என தான் ஒரு போதும் கூறவில்லை எனவும் ஆன்மீகம் செய்யவே வந்ததாக அவர் கூறினார்.

    Also Read : NPHH - ரேஷன் கார்டு வழங்கியதில் மோசடி... தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    தன்னிடம் ஆன்மீக பயிற்சி பெற்றவர்கள் தன்னை கடவுளின் அவதாரம் என கூறுகின்றனர் எனவும் தெரிவித்தார். ஆன்மீகம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன, எந்த சக்தி இயக்குகிறது என்பதை உணர்த்தும் ஆன்மீக பயிற்சி மட்டுமே வழங்கி வருவதாகவும், அருள்வாக்கு தரவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், ஆன்மீக பணியை தொடர்ந்து செய்வேன் இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும், தர்மம் தான் நிலைநாட்டும் எனவும் கூறிய அவர், நேரம் வரும் போது என்னை அறிந்துக்கொள்வீர்கள் என தெரிவித்தார்
    Published by:Vijay R
    First published:

    Tags: Annapoorani, Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி