ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் - ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை நடைபயணம் - ஏப்ரல் 14ஆம் தேதி திருச்செந்தூரில் தொடக்கம்!

அண்ணாமலை யாத்திரை

அண்ணாமலை யாத்திரை

முதலமைச்சரை கண்டித்தும், பாஜக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி நட்டாவிற்கு பாராட்டு தெரிவித்தும் இன்றைய மாநில செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India

தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலை வரும் ஏப்ரல் மாதம் நடைபயணம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இதை பற்றிய குறிப்பு பாஜக எதிர்கால நிகழ்ச்சிகளின் திட்டங்களில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் இன்று கடலூரில் நடைபெற்றது. அதில் முதலமைச்சரை கண்டித்தும், பாஜக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட ஜே.பி நட்டாவிற்கு பாராட்டு தெரிவித்தும் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் வருங்கால திட்டங்கள் குறித்த திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதற்கு முன்னர் தமிழகம் முழுவதும் யாத்திரை நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி ஏப்ரல் 14 ம் தேதி திருச்செந்தூரில் அண்ணாமலை தலைமையில் யாத்திரையை தொடங்குவார் எனவும் இதை பற்றிய குறிப்புகள் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Annamalai, BJP, Thiruchendur