சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர், மாணவியிடம் ஆபாசமாக பேசுவது போன்ற ஆடியோ, பல்கலை. ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இடையே பரவி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் ஊழியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஊழியர்கள் மத்தியில் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் வைரலாக ஆடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவரிடம் கொஞ்சி கொஞ்சி பேசுவது போலவும், அவரிடம் முத்தம் கேட்பது போன்றும் ஆடியோவில் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில் பேசும் ஆண் குரல் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் அரங்க. பாரி என்பவரது குரல் என்பதும், மறு முனையில் பேசும் பெண் குரல் பல்கலைக்கழகத்தின் மாணவி என்பதும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஆடியோ விவகாரம் குறித்து பல்கலைக்கழக தமிழியல் துறைத் தலைவர் அரங்க. பாரி, அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் தனது குரலைப் போன்ற ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதனால் அந்த ஆடியோவை வெளியிட்ட நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்து அண்ணாமலைநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chidambaram, Cuddalore, WhatsApp Audio