தி.மு.க கொடியைக் கட்டும்போது 13 வயது சிறுவன் உயிரிழப்பு: முதல்வர் இழப்பீடு வழங்கவேண்டும்- அண்ணாமலை வலியுறுத்தல்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

தி.மு.க கொடி கட்டும்போது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

 • Share this:
  விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா நடைப்பெற்றது. இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள் அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் பணிகளில் 10 க்கும் மேற்ப்பட்டவர்கள் ஈடுப்பட்டு இருந்தனர்.

  அதில் விழுப்புரம் ரஹீம் லே- அவுட் பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரது இளைய மகனான விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன தினேஷ் என்ற சிறுவனும் கொடி கம்பம் நடும் பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அச்சாலையில் மின் பகிர்மான கழகம் செயல்ப்பட்டு வருவதால் அங்கு அதிக அளவிலான உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. அப்போது பணியில் ஈடுப்பட்டு இருந்த சிறுவன் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உராசியதால் மின்சாரம் தாக்கி சிறுவன் தினேஷ் தூக்கி வீசப்பட்டான்.

  படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரழந்தான். நெடுஞ்சாலைகள், மக்கள் அதிகம் கூடும் இடஙகளில் பேனர் கொடி கம்பங்கள் வைப்பதால் இதுப்பின்ற விபத்துக்கள் ஏற்ப்படுவதோடு உயிரழப்புகளும் ஏற்ப்படுவதை தடுக்க கடந்த அதிமுக ஆட்சியில் பேனர்கள் வைக்கவும் கொடி கம்பங்கள் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது.


  சிறுவன் உயிரிழந்த விவகாரம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘விழுப்புரம் மாவட்டம் ரஹீம் லே-அவுட் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் மகன் ஏகாம்பரம் பச்சிளம் பாலகன் 13 வயது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சிப் பணியில் பொதுக் கூட்டத்திற்கான கொடியை கட்டும்போது, மின்சாரம் தாக்கி இறந்தார் என்ற செய்தி பதைபதைக்க வைக்கிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆளும் கட்சி இந்த செய்தியை மூடி மறைக்காமல் இறந்தவரின் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கி, இது போன்ற நிகழ்வு இனியும் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: