மூத்த தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளனரா? மேகதாது விவகாரத்தில் யார் பக்கம்? - அண்ணாமலை விளக்கம்

Youtube Video

தமிழ்நாடு பா.ஜ.கவில் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாடு பா.ஜ.கவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில், ‘பா.ஜ.க தலைவர் ஆவோம் என்பதை எதிர்பார்த்து கட்சிக்கு வரவில்லை. இது வேகமாக வளர்ந்துவிட்டேன் என்பதாகப் பார்ப்பதைவிட இதனை ஒரு பொறுப்பாகப் பார்க்கிறேன்.. நான், பா.ஜ.கவின் தலைவரானது எந்தவொரு திட்டமிடலும் இல்லை. என்னைப் பற்றி கற்பனையான கட்டுரைகள் நிறைய இணையத்தில் வருகின்றன. நான, காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில்தான் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றேன்.

    காங்கிரஸ் ஆட்சியின்போது மட்டும்தான் நான் பணியிலில் இருந்தேன். மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள் என்பதை நான் ஏற்கமாட்டேன். எல்லாருக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டவர்கள் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள். இவர்களுக்கு விரைவில் வேறு பதவிகள் வழங்கப்படலாம். தமிழ்நாடு அரசியல்களம் இரண்டு பாதைக்கு வந்துள்ளது. ஒன்று தி.மு.க அரசியல் பாதை. மற்றொன்று, தேசியப் பாதை. அந்த அடிப்படையில், அடிமட்டத்திலிருந்து கட்சியை வளர்ப்போம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மோடியின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு தமிழ்நாட்டின் உள்ளது. ஐந்து வருடத்தில் தீவிர களப்பணி செய்து கட்சியை வளர்ப்போம். நான் ஊடகம் குறித்து பேசியதில் தவறில்லை. புதிய ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் தேவை. பொய் செய்தியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினேன். மேகதாது, காவிரி ஆறு உள்ளிட்ட விவகாரங்களில் நான் தமிழ்நாட்டின் பக்கம்தான் நிற்பேன். காலத்தின் சூழலில்தான் நான் கர்நாடகாவில் வேலைப் பார்க்கும் நிலை ஏற்பட்டது. என்னுடைய பூர்விகம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில்தான் என்னுடைய அப்பா, அம்மா விவசாயம் பார்க்கின்றனர். மேகதாது அணை கட்டாயம் கட்டப்படாது’ என்று விளக்கம் அளித்தார்.
    Published by:Karthick S
    First published: