Home /News /tamil-nadu /

கிறிஸ்டினாக மாறுகிறாயா என்று கேட்டார்கள்- அண்ணாமலை பதிவிட்ட மாணவியின் பரபரப்பு வீடியோ

கிறிஸ்டினாக மாறுகிறாயா என்று கேட்டார்கள்- அண்ணாமலை பதிவிட்ட மாணவியின் பரபரப்பு வீடியோ

அண்ணாமலை

அண்ணாமலை

மாணவி இறப்பதற்கு முன்பு பேசிய வீடியோ பதிவை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (47). இவரின் முதல் மனைவி கனிமொழி. கனிமொழி 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகானந்தம் தனது மகளை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்து இருந்தார். தற்போது 12ம் வகுப்பில் படித்து வந்தார். அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் மாணவி தங்கியிருந்தார்.இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாணவி வாந்தி எடுத்துள்ளார்.

    அப்போது அவர் தனக்கு வயிற்றுவலி என்று கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முருகானந்தம் மைக்கேல்பட்டி வந்து தன் மகளை அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாணவி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம்: கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் கோரும் அண்ணாமலை





    அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி  தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாக்டர்கள் திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் வந்து விசாரித்தனர்.


    இந்தநிலையில் மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தி துன்றுத்தியதுதான் தற்கொலைக்கு காரணம் என்று பா.ஜ.கவினர் குற்றம்சாட்டிவருகின்றனர். மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக பேசிய வீடியோ ஒன்றை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    அந்த வீடியோவில் பேசும் மாணவி, ‘என் அப்பாவிடமும், அம்மாவிடம் என்னை கிறிஸ்டினாக மாற்றிவிடவா, நானே படிக்கவைக்கவா என்று கேட்டார்கள். இது இரண்டு வருடத்துக்கு முன்பு நடைபெற்றது. அதிலிருந்து என்னை திட்டிக் கொண்டே இருப்பார்கள். என்னே இங்கே தங்க கூடாது என்று கூறுவார்கள். சிஸ்டர் ராக்கில் மேரி என்பவர் கேட்டார்’ என்று தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai

    அடுத்த செய்தி