முகப்பு /செய்தி /தமிழ்நாடு / EXCLUSIVE: திராவிடக் கருத்தியல் என்று ஒன்று இல்லை.. திமுகவுக்கு மாற்று பாஜகதான்... அண்ணாமலை பிரத்யேக பேட்டி

EXCLUSIVE: திராவிடக் கருத்தியல் என்று ஒன்று இல்லை.. திமுகவுக்கு மாற்று பாஜகதான்... அண்ணாமலை பிரத்யேக பேட்டி

அண்ணாமலை

அண்ணாமலை

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் பயணம், திராவிடக் கொள்கை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

  • Last Updated :

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நியூஸ்18-க்கு பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார். அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், ‘பா.ஜ.கவுக்கு என்று யுக்தி உள்ளது. நாங்கள் தொடர்ந்து பணி செய்து அதன் மூலம் அதனை சாதித்து வருகிறோம். எங்களுடைய கட்சியில் நாங்கள் தனிப்பட்ட நபர்களை மையப்படுத்துவது இல்லை. கட்சியின் கொள்கை மற்றும் கூட்டுத் தலைமை. கடந்த 10 மாதங்களாக தி.மு.க தவறுகளை மக்கள் முன்னிலையில் தீவிரமாக எடுத்து வைத்து வருகிறோம்.

தி.மு.க. வுக்கு மாற்று வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். குடும்ப அரசியல், ஊழல், கார்பரேட் அரசியலை எதிர்கிறார்களோ அவர்களுக்கு பா.ஜ.க ஏற்ற கட்சி. எதிர்காலத்தில் தி.மு.கவுக்கு உண்மையான மாற்று பா.ஜ.க. தான்.

தி.மு.கவின் நிலைப்பாட்டுக்கு 360 டிகிரி எதிரான கொள்கையைக் கொண்டது பா.ஜ.க. மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதை நாங்கள் நம்புகிறோம். தி.மு.க போல அல்லாமல் நாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சேவைகளை தீவிரமாக வழங்கிவருகிறோம். தி.மு.கவால் அவர்கள் வாக்குறுதி அளித்த பொங்கல் பரிசுப் பொருள்களைக் கூட ஒழுங்காக வழங்க முடியவில்லை. தமிழ்நாடு தி.மு.கவால் தவறாக ஆளப்படுகிறது. தமிழ்நாடு அரசு 6.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகள் மூலம் எப்படி 9,000 கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று உற்றுப் பார்க்கிறோம். தி.மு.கவைப் பொறுத்தவரை சமூக நீதி என்பது மதுபானங்களை கட்டற்று வழங்குவது. மோடியின் குஜராத்தில் பாருங்கள், மதுபானத்திலிருந்து ஒரு ரூபாய் வருமானம் ஈட்டாமல் பட்ஜெட்டுக்கும் கூடுதலான வருவாயைக் கொண்டுள்ளது. திராவிடக் கருத்தியல் என்று ஒன்று இல்லை. வளர்ச்சியில் திராவிட மாடல் என்றால் என்ன என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நான் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகிறேன்.

திராவிட மாடல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது என்கிறார் மு.க.ஸ்டாலின். பா.ஜ.க அனைவரையும் உள்ளடக்கியது இல்லையா? தி.மு.க உள்ளடக்கியது என்றால் எப்படி ஒரு குடும்பம் மட்டும் கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளது. தமிழ்நாடு முழுவதுமுள்ள 44 குடும்பங்கள் தி.மு.கவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அப்படி, இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளாக அந்த குடும்பங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். திராவிட உலகத்துக்கு தி.மு.க மட்டும் உரிமை கோர முடியாது.

இந்த நிலப் பரப்பை சேர்ந்த யாராக இருந்தாலும் அவர்கள் திராவிடர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். திராவிடம் என்பது அனைவரையும் அழைத்துச் செல்வது மற்றும் சமூக நீதியாகும். பிராமணர்களைத் தாக்குதல், பிற்படுத்தப்பட்டோரைத் தாக்குதல், இந்துகளை எதிர்ப்பது என்பது திராவிடம் கிடையாது. திராவிடம் என்பது எல்லாப் பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதாகும்.

கமல்ஹாசனின் கட்சியிலிருந்து ஏராளமானவர்கள் விலகி பிறகட்சிகளில் சேர்ந்து வருகின்றனர். மக்கள் அவருக்கு இரண்டு வாய்ப்புகளைக் கொடுத்தனர். ஆனால் மக்கள் பிரச்னைகளை முன்னெடுப்பதில்லை என்பதை மக்கள் பிற்பாடு புரிந்துகொண்டனர்’ .

top videos

    இவ்வாறு அண்ணாமலை  தெரிவித்தார்.

    First published:

    Tags: Annamalai, Exclusive