Home /News /tamil-nadu /

Exclusive : இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கையில் அரசு தலையிட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் - அண்ணாமலை

Exclusive : இந்துக்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவ இஸ்லாமிய நம்பிக்கையில் அரசு தலையிட்டாலும் பாஜக குரல் கொடுக்கும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : மத விஷயங்களில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை உள்ளதா என நியூஸ் 18க்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    தருமபுரம் ஆதினத்தில் நடக்க உள்ள பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில், ஆதினம் குருமகா சன்னிதானத்தை பல்லக்கில் அமரவைத்து, மனிதர்கள் தூக்கிச் செல்ல மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார். பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் இந்த பழக்கத்திற்கு திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    ஆதினத்தை மனிதர்கள் சுமந்து செல்வதை ஏற்க முடியாது என அவர்கள் கூறியிருந்தனர். இந்த மாத இறுதியில் பட்டினப் பிரவேசம் நடைபெற உள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆதினத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

    பல்லக்கில் தூக்சிச் செல்ல தடை விதிக்கப்பட்டதை அடுத்து பல தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரை கொடுத்தாவது தருமபுரம் பட்டின பிரவேசத்தை நடத்துவோம் என்று மதுரை ஆதினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். முதலமைச்சர் இதில் நல்ல முடிவை விரைவில் எடுப்பார் என்றும், ஆதீனத்துடன் பேசி சுமூகமான முடிவை அரசு எடுக்கும் எனவும் விளக்கமளித்தார்.

    இதற்கிடையில், தருமபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ளது தமிழக நாகரிகம் மற்றும் கலாசாரத்திற்கு எதிரானது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை, தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும் ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார்.

    Must Read : கோட நாடு பங்களாவுக்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் 9 மணி நேர விசாரணை

    இந்நிலையில், பல்லக்கு தூக்கும் விவகாரத்தில் தானே தருமபுரம் பல்லக்கை தோளில் சுமப்பேன் என்று கூறியது குறித்த கேள்விக்கு  நியூஸ் 18 தமிழுக்கு பேட்டியளித்த அண்ணாமலை,  “இது மதம் சம்பந்தப்பட்ட, ஆண்டாண்டு காலமாக இருந்து வரும், மனிதர்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விவகாரம். இதில் அரசு தலையிடுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?, ஒரு சட்டத்தை கைக்காட்டி இந்த சட்டத்தின் மூலமாக நிறுத்துகின்றோம் என்று கூறி, அங்கிருக்கும் அரசு அதிகாரி அதை நடைமுறைபடுத்த விரும்புகிறார். அது எப்படி இதற்கு பெருந்தும்? நம்முடைய கலாச்சாரத்தில் குருமார்களுக்கு தனி மரியாதை இருக்கிறது.

    கடவுளைவிட மேலாக ஒரு குருவுக்கு மரியாதை கொடுத்திருக்கின்றோம். ஒரு குருவை பல்லக்கிலே சுமந்து கொண்டு செல்வது என்பது, எப்படி ஒரு மனிதன் இனனொரு மனிதனை காயப்படுத்துவதாக அமையும்?, இதற்கு அரசு எந்தவித விளக்கமும் கொடுக்காமல், எதற்காக போட்டாப் போட்டியாக உள்ளே சென்று இதை நடைமுறை படுத்த வேண்டும்?, அப்படி இருப்பதால் குரல் கொடுக்கிறோம். நாளை கிறித்தவ மதம், இஸ்லாமிய மதத்திலும் இந்த அரசு தலையிட்டாலும் கூட, பாரதிய ஜனதா கட்சி அதற்கு எதிராக குரல் கொடுக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.” என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP

    அடுத்த செய்தி