• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எச்.ராஜாவின் சர்ச்சைக்கு இதோடு முற்று புள்ளி வைக்க வேண்டும் - அண்ணாமலை

எச்.ராஜாவின் சர்ச்சைக்கு இதோடு முற்று புள்ளி வைக்க வேண்டும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

காந்தியின் மரணத்திற்கு காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது.

  • Share this:
பாஜக பத்திரிக்கையாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. நாங்கள் பத்திரிகையாளர்களை வைத்து அரசியல் செய்யவில்லை. இதோடு, எச். ராஜா அவர்களின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளிவைக்க வேண்டும் என்று, சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்த ’சாவர்கர்: எ கான்ஸ்டண்ட் லெகசி’  என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

நிகழ்ச்சியில் அண்ணாமலை எழுத்தாளர்  விக்ரம்சம்பத்துடன் இணைந்து புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் பேசுகையில், தமிழகத்தில் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் சாதித் தலைவர்களாக மாற்றி கூண்டுக்குள் அடைத்து விட்டார்கள். திறந்த மனநிலையுடன் படித்து தலைவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வா.உ.சி இழுத்த செக்கை என்னால் இழுக்க முடியாது. ஒரு துளி எண்ணெய் ஆனாலும் நமது நாட்டிற்காக பயன்படும் என்று செக்கிழுத்தவர் வா.உ.சி. தமிழகத்தில் கல்வி எளிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் கல்வி அப்படி இருக்கக் கூடாது ஆழமானதாகவும் அறிவை வளர்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டவர் என சாவர்க்கர் அடையாளம்  காட்டப்படுகிறார். ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டது உண்மைதான். ஆனால், அது அரசியல் ரீதியிலானது, அரசியல் தந்திரம். காந்தியின் கொலைக்கும் சாவர்க்கர்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சாவர்க்கர் காந்தியின் கொலையோடு சம்பந்தப்படுத்தபட்டுள்ளார்.

ஹிந்து மகாசபையில் இருத்ததால் கோட்சேவை பாஜக ஆதரிக்கிறது என்கிறார்கள். காந்தியின் மரணத்திற்கு காரணமான கோட்சேவை ஒருபோதும் பாஜக ஏற்றுக் கொள்ளாது. திறந்த மனநிலையில் இருப்பதாலேயே தமிழர்களுக்கு உலகளவில் மதிப்பு உள்ளது . திறந்த மனநிலையில் சாவர்க்கரையும் படிக்கவேண்டும். படித்தபிறகு அவரை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும்.

Must Read : கருணாநிதியை முதலமைச்சராக்கிய எம்.ஜி.ஆர். நம்பிக்கை துரோகியா? துரைமுருகனுக்கு அதிமுக கண்டனம்!

எச்.ராஜா அற்புதமான மனிதர் அவர் பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார் .பாஜக சார்பில் நானும் பதில் அளித்துள்ளேன். பாஜக பத்திரிக்கையாளர்களை மதிக்கக்கூடிய கட்சி. நாங்கள் பத்திரிகையாளர்களை வைத்து அரசியல் செய்யவில்லை. இதோடு எச். ராஜா அவர்களின் சர்ச்சைக்கு முற்றுபுள்ளிவைக்க வேண்டும் என்றார் அண்ணாமலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: