Home /News /tamil-nadu /

திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு ஒரு நாற்காலியை தரக்கூட மனமில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு ஒரு நாற்காலியை தரக்கூட மனமில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

Annamalai : சிவகங்கையில் நரிக்குறவா்கள் தரையில் அமரவைத்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விமர்சித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாலை ஆளுங்கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளதாக கூறியுள்ளார்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நல்லாங்குடி பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனமக்கள் தங்களுடைய வசிப்பிடத்திற்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுடைய பகுதிக்கு புதிதாக வந்தவர்களுக்கு பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம், ஏற்கனவே அங்கு வசிப்பவர்களின் பெயரை பட்டியலிலிருந்து விடுவித்ததாக கூறப்படுகிறது.

    விடுபட்டவர்களுக்கும் பட்டா வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள், கடந்த திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு மனு அளிக்க சென்றனர்.கூட்ட அரங்கில் பல இருக்கைகள் காலியாக இருந்தும் அதிகாரிகள் அவர்களை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர வைத்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

    இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அரசு அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்ட இந்த பாகுபாடு திராவிட மாடல் என்று சொல்லிக் கொள்ளும் ஆளுங்கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளது என விமர்சித்துள்ளார்.

    Must Read : நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

    சாதிகள் அழிக்கப்பட்டதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திராவிட மண்ணில் காட்டப்பட்ட இந்த சாதிப் பாகுபாடும், சாதிக் கூத்தும் திமுகவின் போலி முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது என்றும், திராவிட மாடல் ஆட்சியில் பழங்குடியின மக்களுக்கு ஒரு நாற்காலியை தரக்கூட மனமில்லை என்றும் கூறியுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 6 பேர் மட்டும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களை சந்தித்து மனு அளித்ததாகவும், மீதமுள்ளவர்கள் தரைத்தளத்தில் காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர்களை இருக்கையில் அமரக்கூடாது என்றோ, தரையில் உட்கார வேண்டும் என்று வற்புறுத்தவோ, நிர்ப்பந்திக்கவோ இல்லை எனவும், அதுபோன்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுதொடர்பாக நரிக்குறவர் இனத்தலைவர் மாணிக்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் சமஉரிமையுடன் நடத்தப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.நரிக்குறவர் சமூக மக்கள் வழங்கிய மனுக்கள் மீது இன்று சிறப்பு முகாம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Sivagangai

    அடுத்த செய்தி