Home /News /tamil-nadu /

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவே இல்லை - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதாகவே இல்லை - மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

மு.க.ஸ்டாலின், அண்ணாமலை

கடந்த 2019ஆம் ஆண்டு, இதே போல் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்ற சர்ச்சை எழுப்பட்ட நிலையில் அந்த சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளார் அண்ணாமலை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikkudi (Karaikudi), India
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை எனவும் மிசா சட்டத்தில் கைதானதை போல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

    பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழ்நாடு வந்தார். மதுரை மற்றும் காரைக்குடியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்நிலையில் காரைக்குடியில் நடைபெற்ற பாஜக கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கட்சி நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.

    இதனையடுத்து, பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாடு அரசு பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு கைது செய்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சிறை செல்ல அஞ்சுபவர்கள் இல்லை எனவும் திமுகவினர் தான் சிறை செல்ல அஞ்சுவார்கள் எனவும் கூறினார்.

    இதையும் வாசிக்க: எய்ம்ஸ் மருத்துவமனையை யாரோ திருடி சென்று விட்டனர் - எம்.பி மாணிக்கம் தாகூர் கேலி

    இதனை தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் மிசா சட்டத்தில் சிறை செல்லவில்லை, மிசா சட்டத்தில் சிறை சென்றது போல் பொய் சொல்லி வருகிறார் என விமர்சித்தார்.

    கடந்த 2019ஆம் ஆண்டு, இதே போல் முதலமைச்சர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைதாகவில்லை என்ற சர்ச்சை எழுப்பட்ட நிலையில் அந்த சர்ச்சையை மீண்டும் எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Annamalai, Bjp state president, CM MK Stalin

    அடுத்த செய்தி