தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளிலும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், பெட்ரோல், டீசல் விலை குறையும், தற்போதய விலை உயர்வால் மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, நியூஸ் 18 செய்தியாளர் செல்வா நடத்திய நேர்காணலின்போது கூறியுள்ளார்.
கேள்வி: நீண்ட இழுபறிக்குப் பின்னர் அதிமுகவிடம் இருந்து 20 தொகுதிகளை பெற்றுள்ளீர்கள், வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கின்றது?
பதில் : நீண்ட இழுபறி எல்லாம் இல்லை. கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிள் பேசும்போது, ஒரே தொகுதியை இரண்டு கட்சியும் கேட்பது சகஜம்தான். 20 தொகுதிகளும் எங்களைப் பொறுத்தவரையில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்தான். நிச்சயமாக எங்கள் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
கேள்வி : வெற்றி வாய்ப்பு இருக்கின்றது என்பது அனைத்து கட்சிகளும் பொதுவாக சொல்லும் கருத்து. எனினும் கள நிலவரத்தைப் பார்த்தால், பாஜகவுக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி இருப்பதாகத் தெரிகின்றது, பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை அதிகரித்திருக்கின்றது இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : இதெல்லாம் சின்ன சின்ன பிரச்னைகள், பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்துவிட்டது; குறையும். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. அரசுக்கும் இது தெரியும். ஆனால், அரசு செய்த சாதனைகளைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அந்த வகையில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
வீடில்லாதவர்களுக்கு வீடு, கேஸ் அடுக்பு இல்லாதவங்களுக்கு கேஸ் அடுப்பு என ஏகப்பட்ட விஷயங்களை அரசு செய்திருக்கிறது. இதை எல்லாம் பாசிட்டிவான விஷயங்களாகப் பார்க்கலாம். பெட்ரோல் விலை, கேஸ் விலை கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும். அதற்கான சாத்தியக் கூறுகளை நாம் பார்க்க ஆரம்பித்துவிட்டோம்.
கேள்வி : கட்டுக்குள் கொண்டு வரப்படும், குறையும் என்பது வாய் வார்த்தையாகத்தான் இருக்குமா, அல்லது தேர்தலை முன்னிறுத்தி ஒரு சில துறைக்கு கொண்டுவரப்படுமா?
பதில் : தேர்தலுக்காக மட்டும் கவர்ச்சிகரமான திட்டங்களைப்போட்டு மக்களை ஏமாற்றும் கட்சி பாஜக கிடையாது. கடந்த மூன்று நான்கு நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை குறைய ஆரம்பித்துவிட்டது. நிச்சயமாக மக்களுக்கு இது ஒரு பிரச்னையாகத் தெரியாது.
கேள்வி : மக்களுக்கு இது பெரிய பிரச்னையாக இருக்காது என்று சொல்கிறீர்கள் ஆனால், அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் படும் துன்பங்கள், அவர்கள் பேசும் வார்த்தைகளில் மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதைப் பார்க்க முடிகின்றது. இதை எப்படி சமாளிப்பீர்கள்?
Must Read : மநீம கூட்டணியில் சமக, ஐஜேகே கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு
பதில் : எந்த எதிர்ப்பும் கிடையாது. இது குறித்து நேரடியாக தொலைக்காட்சியில் விவாதிக்க தயார்.” இவ்வாறு அண்ணாமலை அப்போது கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, BJP, Election 2021, TN Assembly Election 2021