Home /News /tamil-nadu /

ராகுல் காந்தி கண் முன்னே பாஜக தனிபெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் - அண்ணாமலை

ராகுல் காந்தி கண் முன்னே பாஜக தனிபெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சியமைக்கும் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : நாளை நடக்கும் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அண்ணாமலை தெரிவித்தார்.

    சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்திதார். அப்போது, புரிதல் இல்லாத கட்சிகள், ஆளும்கட்சியினர் தொடர்ச்சியாக பொய்களை பரப்பி வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். நீட் விலக்கு சட்ட மசோதா ஏன் திருப்பி அனுப்பப்பட்டது என்று மாநில அரசுக்கு தெரியப் படுத்தியுள்ளதாக ஆளுநர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ள காரணங்களை மாநில அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் கூறினார்.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வியின் தரம் குறைந்து வருவதாக கூறிய அண்ணாமலை, நாளை நடக்கும் அனைத்து கட்சிக்கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று தெரிவித்தார். ஆளுநர் அளித்த அறிக்கையை முழுமையாக வெளியிட்ட பின்னர் கூட்டம் நடத்தினால், பாஜக பங்கேற்கும் என்றார்.

    மேலும், மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு செய்யக்கூடாது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்றும் ராகுல் காந்தி கண் முன்னே அது நடக்கும் என்றும் கூறினார்.

    நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மாநில சுயாட்சியில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

    Must Read : சுயேச்சை வேட்பாளராக சென்னையில் களமிறங்கிய கானா பாலா

    மேலும், தமிழக மக்களிடம் தமிழ்நாடு மற்றும் தமிழ் குறித்த புரிதல் இருக்கிறது. அதேநேரம் இந்தியா குறித்த புரிதலும் அவர்களிடம் உள்ளது. உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என மத்திய அரசையும் பாஜகவையும் ராகுல் காந்தி கடுமையாக சாடினார். இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதாமாக அண்ணாலை கூறியுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Annamalai, BJP, Rahul gandhi

    அடுத்த செய்தி