‘கொள்கை சார்ந்த அரசியல்... பாஜக தமிழக சட்டசபைக்குள் செல்லும்...’ - அண்ணாமலை

அண்ணாமலை

அதிமுக - பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இது உறுதி என்றார்.

 • Share this:
  தாமரை சின்னம் மூலம் பாஜக தமிழக சட்டசபைக்குள் செல்லும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கொள்கை சார்ந்த அரசியலை செய்து வருகிறோம். அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அரசியல் செய்கிறோம் இதில் எந்தவித சமரசமும் இல்லை என அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜக தமிழக துணை தலைவருமான அண்ணாமலை கூறியுள்ளார்.

  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை போட்டியிடுகிறார்.  இதையொட்டி பள்ளப்பட்டி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக-பாஜக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
  கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் மு. தம்பிதுரை,  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவது குறித்த பேசினார்.

  நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாமலை  பேசுகையில், “அதிமுக அரசு மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திமுக கூட்டணிக்கு கண்டிப்பாக மக்கள் வாய்ப்பு வழங்க மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்.  பாஜக தாமரை சின்னத்தின் மூலம் தமிழக சட்டமன்றத்திற்கு செல்லும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” என்றார்.

  அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெல்லும் திமுகவை சாராதவர்கள் திமுகவிற்குள் புகுந்து அந்த கட்சியை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர். கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பொய்யான வாக்குறுதிகள், அதாவது வாக்காளர்களுக்கு 3 சென்ட் நிலம் தருவதாக கூறினார்.

  பாஜகாவை பொறுத்தவரை கொள்கை சார்ந்த அரசியலை செய்து வருகிறோம். அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என  அரசியல் செய்கிறோம் இதில் எந்தவித சமரசமும் இல்லை ஓட்டுக்காக அரசியல் செய்வதில்லை. நமது கொள்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர்கள் ஏற்றுக் கொண்ட பிறகு அடிப்படையில்  மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதே நமது அரசியல் இலக்கு. ஓட்டுக்காக பொய் பேசி, மக்களை திசை திருப்ப வேண்டும் என்பது எங்களது நோக்கம் அல்ல என்றார்.

  அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் என்னை வெற்றி பெறச் செய்தால், பிரதமர் மோடியை அரவக்குறிச்சி தொகுதிக்கு அழைத்து வந்து அரவக்குறிச்சி தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். இவை அனைத்தும் ஆறு மாதத்தில் நடத்திக் காட்டுவேன்.

  அரவக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்கு நீர்மேலாண்மை,  நிலமேலாண்மை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வளர்ச்சிக்கு  முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் இது உறுதி.

  Must Read : தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன்? சுகாதாரத்துறை செயலாளர் பதில்

   

  நரேந்திர மோடியிடம் நேரடியாகப் பேச கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ள நான்,  தொகுதி வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பிரதமரிடம் நேரடியாக பேசி கோரிக்கைகளை பெற்றுத் தர முடியும் என்றார்.
  Published by:Suresh V
  First published: