தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டே நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 26-ம் தேதியன்று அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
தி.மு.க சார்பில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்திமுடித்துள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது, மாநகராட்சிகளில் அதிக இடங்களை பா.ஜ.கவுக்கு வழங்க முடியாது. நகராட்சி, பேரூராட்சிகளில் குறிப்பிட்ட இடங்களை தரத் தயார். அதேவேளையில் பா.ஜ.க அந்த இடங்களை பெற்று வெற்றி பெறவேண்டும்.
எங்களது கட்சியினருக்கு வழங்கும் இடங்களை உங்களக்கு அளிக்கிறோம் எனில் அதில் வெற்றி பெற வேண்டும். நாங்களும் போட்டியிடுகிறோம் என இருப்பதால் ஒரு பயனும் இல்லை. வேறு ஒருத்தரின் வாய்ப்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள்’ என்று அ.தி.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிவுக்கு வந்தது.
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘நகர்புற உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அ.தி.மு.கவுடன் பேச்சுவார்த்தை தொடரும். பா.ஜ.க வலிமையாக உள்ள பகுதிகளில் இடங்களை ஒதுக்க அ.தி.மு.கவிடம் வலியுறுத்தியுள்ளோம்’ என்று தெரிவித்தார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.