Home /News /tamil-nadu /

ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில் பாஜக குற்றச்சாட்டை ஏற்று நடவடிக்கை- வரவேற்கும் அண்ணாமலை

ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில் பாஜக குற்றச்சாட்டை ஏற்று நடவடிக்கை- வரவேற்கும் அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

ஊட்டச்சத்து பெட்டக விவகாரத்தில் தமிழக அரசு பா.ஜ.க குற்றச்சாட்டை ஏற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. ஹெல்த் மிக்ஸ், ஆவின் நெய், பேரீட்சை, மருந்துகள் உள்ளிட்ட பொருள்கள் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் அரசு மொத்தம் 23.88 லட்சம் ஹெல்த் மிக்ஸ் வாங்குகிறது. அந்த ஹெல்த் மிக்ஸை ஆவின் நிறுவனத்தில் வாங்காமல் தனியார் நிறுவனத்தில் வாங்க தமிழக அரசு முடிவு செய்தது.

    ஆவின் ஹெல்த் மிக்ஸைவிட தனியார் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் விலை 60 சதவீதம் அதிகமாகும். அதேபோல, அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திலிருந்து இரும்புச் சத்து மருந்துவாங்குவதாலும் அரசுக்கு 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார்.

    இதுகுறித்து விளக்கம் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை, இரும்புச் சத்து மாத்திரையை சந்தை விலையைவிட 37.35 ரூபாய் குறைவாகவும், ஹெல்த் மிக்ஸ் மாவினை 127.50 ரூபாய் குறைவாகவும் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது என்று விளக்கம் அளித்தது.

    இந்தநிலையில், ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் எல்1 ஆக வந்துள்ளது. அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்த அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் எல் 2 வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

    இதுகுறித்த அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை.

    கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை தமிழ்நாடு பா.ஜ.க வெளியிட்டது. அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம்.

    கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகத்துக்கான டெண்டர் திறப்பு: அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை

    பா.ஜ.க வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று தி.மு.க அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

    லஞ்ச ஒழிப்புத் துறையில் பா.ஜ.க அளித்த புகாரையும் தி.மு.க அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் health mixன் நிலை என்ன என்பதையும் தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai

    அடுத்த செய்தி