• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சசிகலாவின் அரசியல் வருகை - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம்

சசிகலாவின் அரசியல் வருகை - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம்

சசிகலா, அண்ணாமலை

சசிகலா, அண்ணாமலை

சசிகலா அரசியல் வருகை அ.தி.மு.க உட்கட்சி விவகாரம். அதில், நான் கருத்து சொன்னால் சரியாக இருக்காது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘அ.தி.மு.கவில் இருக்கும் உள் விசயங்களை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் பேசுகின்றனர். சசிகலா வருகை குறித்து நான் கருத்து சொன்னால் அது தவறாக போகும். யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம். இந்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் பேசிக்கொள்கின்றனர். இந்த நேரத்தில் நான் கருத்து சொல்வது சரியல்ல. நமது அம்மா நாளிதழ் பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு யார் திட்டினாலும், பாராட்டினலும் ஆதாரங்களோடு திட்டுங்கள். பாராட்டுங்கள்.

    தி.மு.கவை பா.ஜ.வும் விமர்சனம் செய்கின்றது. அ.இ.அ.தி.மு.க விமர்சனம் செய்கின்றது. எடப்பாடி பழனிசாமி கூட சமீபத்தில் தி.மு.கவைக் கண்டித்து அறிக்கை கொடுத்து இருந்தார். ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக பா.ஜ.க செயல்படுகின்றது. அ.தி.மு.கவில் அதிக எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். அவர்களும் பேசுகின்றனர்.

    சில இடங்களில் நாங்கள் சொல்வதை தமிழக முதல்வரும் கேட்டுக்கொள்கின்றார். கோவில்கள் திறப்பது, ஆவின் டெண்டர் போன்றவற்றை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் தி.மு.க பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்தான். தி.மு.க பா.ஜ.க இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுகின்றது.

    அ.தி.மு.க தமிழகத்தில் இருந்து கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தியா சார்பில் இருந்து வரும் போது பா.ஜ.க கருத்து தெரிவிக்கின்றது. யார் எதிர்கட்சி என்று அ.தி.மு.க,  பா.ஜ.கவினடையே போட்டி இல்லை. ஒன்றாக இருக்கின்றோம். கூட்டணி கட்சியுடன் சுமூகமான உறவை வைத்திருக்கிறோம். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். போகலாம். மக்கள் ஏற்றுக்கொள்வதை பொறுத்தது. விடையை மக்களிடமே விட்டுவிடலாம்.

    தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழல் நடக்க போகின்றது. அதை சுட்டி காட்டிகின்றோம். கண்ணாடி மாளிகையில் அமர்ந்து அமைச்சர் கல் எறிகின்றார். அவர் வீட்டை சுத்தம் செய்துவிட்டு கேட்கட்டும். பதில் சொல்கின்றேன். அமைச்சர் செந்தில் பாலாஜி வாயில் இருந்தே ஆதாரம் வரும். எல்லா உண்மைகளும் வெளிவரும். தி.மு.க, பா.ஜ.க இடையே இந்த விடயத்தில் கருத்து மோதல்கள் நடைபெறவில்லை. கொடுத்த ஆதாரங்களுக்கு பதில் வரவில்லை. பெரிய விஷயம் நடக்க இருக்கின்றது என சொல்கின்றோம். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை. அவர்கள் சுதாரித்து கொள்வார்கள் என நினைக்கிறேன். முதல்வர் நிச்சயமாக கண் வைத்து இருக்கின்றார். நடவடிக்கை எடுப்பார். மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: