தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிககளுக்கு இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று முதலில் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தன.
அதனைத் தொடர்ந்து பா.ம.கவும் ஆளுநர் விருந்தை புறக்கணித்தது. இந்த நிலையில், இன்று தி.மு.கவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன.
இந்தநிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜக தலைவர் அண்ணாமலை, ‘தேநீர் விருந்தை திமுக புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். அம்பேத்கர் பிறந்த நாளினை பாஜக மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை வழங்கும் நாளாக கொண்டாடி வருகிறது. தொண்டர்கள் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சி இல்லை. சில தலைவர்கள் தவறாக வழி நடத்துகின்றனர்.
அண்ணல் அம்பேதகர் வைத்து தான் அரசியல் செய்ய முடியும் என இருக்கும் தலைவர்களை திருத்த முடியாது. அம்பேதகர் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி பாஜக. ஒரு போதும் வன்முறைக்கு, வன்முறைக்கு தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் அளவில் அமைதியின் வழியில் செல்கிறோம். ஆளுநரின் தேனீர் விருந்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் பங்கேற்காதது ஆளுநர் மாளிகைக்கு டீ செலவு மிச்சம்.
தமிழக ஆளுநரின் தேநீர் விருந்து: திமுக, காங்கிரஸ் கட்சிகளும் புறக்கணிப்பதாக அறிவிப்பு..
ஆளுநர் மசோதாக்களை திரும்ப அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். இதனை வெள்ளை அறிக்கையாக வெளியிட திமுக தயாரா? திமுக அரசு தயார் செய்து கொடுத்த ஆளுநர் உரையை அப்படியே ஆளுநர் படித்தார். அப்போது இருந்த மாண்பு இப்போது இல்லையா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai