எல்.முருகனைத் தவிர 75 ஆண்டு காலத்தில் அருந்ததியர் சமுதாயத்திலிருந்து அமைச்சர் வரவில்லை - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

75 ஆண்டுகாலத்தில் அருந்ததியர் சமுதாயத்தில் இருந்து எந்த கட்சியிலும் ஒரு அமைச்சர் வரவில்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

  • Share this:
தமிழகத்தில் அதிகம் பேசப்படும் வார்த்தை சமூகநீதி, பதில் தெரியவில்லையென்றால் திராவிட கட்சிகள் சமூகநீதியை பற்றி பேசுவார்கள். எல்.முருகனுக்கு பாஜக செய்ததை எந்த திராவிட கட்சிகளும் செய்து இருக்காது.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சென்னை மக்கள் மன்றம் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தநிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, ஏழை குடும்பத்தில் வளர்ந்து, இன்று இணை அமைச்சராக உள்ள முருகனை பார்க்கும் போது சரியான கட்சியில் தான் இருக்கிறேன். சரியான கட்சியில் தலைவராக இருக்கிறேன். சரியான கட்சி இந்தியாவின் தலைமை பண்பில் உள்ளது என பேசினார். மேலும் 75 ஆண்டுகாலம் அருந்ததியர் சமுதாயத்தில் இருந்து எந்த கட்சியிலும் ஒரு அமைச்சர் வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

12 அமைச்சர்கள் தலித் சமுதாயத்திலும், 8 அமைச்சர்கள் பழங்குடியின சமுதாயத்திலும், 28 அமைச்சர்கள் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்தும் அமைச்சர்களான உள்ளனர்.
Published by:Karthick S
First published: