முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கருணாநிதி, ஜெயலலிதா போல நானும் தலைவர்- அண்ணாமலை

கருணாநிதி, ஜெயலலிதா போல நானும் தலைவர்- அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

கருணாநிதி, ஜெயலலிதாபோல நானும் தலைவர் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘என்னுடைய முடிவுகளில் எந்த பாரபட்சமும் இருக்காது. தலைவர்கள் முடிவெடுப்பதில் நான்கு பேர் கோபித்துக் கொண்டு வெளியே போக தான் செய்வான். அண்ணாமலையான நான் லீடர். லீடர் மாதிரி தான் முடிவெடுப்பேன். மேனேஜர் மாதிரி முடிவெடுக்க மாட்டேன். அது என் கட்சி தொண்டர்களுக்கு அழகல்ல.

நான் இங்கு இட்லி, தோசை சாப்பிட வரவில்லை. ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் ஒரு தலைவர். நான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். திராவிட கட்சிகளில் இருந்து  பா.ஜ.கவுக்கு வந்து பா.ஜ.கவை வளர்க்க வேண்டும் என்ற நிலை மாறி பா.ஜ.கவிலிருந்து சென்று திராவிட கட்சிகளை வளர்க்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ? துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது. விலகி சென்று விவசாயம் பண்ண போவதில்லை. இன்னொரு தலைவன் கீழ போய் உக்காந்து  அந்த தலைவன் வாழ்க என  கோஷம் தான் போட போகிறார்கள்.

அவர்கள் விவசாயம் பண்ண போறேன். மக்களுக்கு தனியாக சென்று நல்ல விசயம் பண்ண போகிறேன் என்று கூறினால் நானே முன்நின்று பாராட்டுவேன்.  தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க கட்சிகளில் இருந்து பெரும் தலைவர்கள் விலகி மாற்றுக் கட்சியில் இணையும் பொழுது எப்படி அந்த கட்சியின் தலைவர்கள் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ முடிவு எடுத்தார்களோ அதே போல் நானும் ஒரு தலைவன். தலைவனாகவே முடிவெடுப்பேன்.

' isDesktop="true" id="905500" youtubeid="MJIBrtKnm04" category="tamil-nadu">

தலைவன் எடுக்கும் முடிவில் விலகி செல்பவர்கள் அவர்களின் விருப்பப்படி விலகி செல்லட்டும். அதற்கு நான் ஒருபோதும் பின்வாங்க போவதில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மேனேஜர் போல் அமர்ந்து இரண்டு இட்லி, தோசை சாப்பிட்டு விட்டு செல்வதற்காக நான் இந்த பொறுப்பிற்கு வரவில்லை. மூன்றாவது கியரில் மெதுவாக பயணிப்பதாகவே நான் இப்பொழுது கருதுகிறேன்.

நிச்சயமாக 2024 தேர்தலுக்கு முன்பு ஐந்தாவது கியர் செல்லும் வேகத்தில் பயணிப்பேன். முதலமைச்சரை முதலில் நன்றாக தூங்க விடுங்கள். அவர் தூங்கி எழும்பொழுது என்ன பிரச்சனைகள் இருக்குமோ என்ற அச்சத்திலே தூங்க செல்வதனால் சரியாக தூங்காமல் இருக்கிறார். அதனாலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரை தெளிவாக நீங்கள் தூங்க விட்டால் மறுநாள் தெளிவா பேச ஆரம்பித்து விடுவார்’ என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Annamalai