குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். சரத் பவார் உள்ளிட்ட மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்தனர்.
பா.ஜ.க சார்பில் ஓடிசா மாநிலத்தைச் சார்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அவர், ஏற்கெனவே ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தவர். இதனையடுத்து, பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் பா.ஜ.க கட்சி ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக பா.ம.க அறிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது - முழு விவரம்
இந்தநிலையில், தமிழக எதிர்கட்சித் தலைவரும், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்டவர்கள் நேரில் சென்று சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்பின்போது, திரௌபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி கோரிக்கைவைத்தனர். அந்தச் சந்திப்பின்போது, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.