முதல்வன் பட பாணியில் ஆக்ஷனில் இறங்கிய அண்ணாமலை... நிர்வாகிகள் கலக்கம்

அண்ணாமலை

பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கமால் இருந்தவர்களை, வீட்டிலேயே இருக்க சொல்லுங்கள் என்றுள்ளார் மாநில தலைவர் அண்ணாமலை.

  • Share this:
பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர் . மேலும் பல்வேறு சார்பு அணிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகிறது.  பாஜக தலைவர் அண்ணாமலையும் முன்னாள் தலைவர்கள் முக்கிய நிர்வாகிகள் என ஒவ்வொருவரையும் நேரில் சென்று சந்தித்து வருகிறார்.கட்சி அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில் மாவட்ட நிர்வாகிகள் அவரை சந்திக்க வரும்போது சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு யார் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற முக்கிய நிர்வாகிகளின்  பட்டியல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.  அவர்கள் எல்லாம் ஆலோசனை கூட்டத்திற்கு வருவார்கள் என்று தொழில்நுட்ப பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு!

பின்னர் அண்ணாமலை ஆலோசனைக் கூட்டத்திற்கு வந்துள்ளார்.  ஆனால் பட்டியலில் உள்ள பாதிப்பேர் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரவில்லை.  இதைப்பார்த்த அண்ணாமலை எத்தனை பேர் வரவில்லை? ஏன் வரவில்லை? என்று விசாரித்துள்ளார்.  சரியான காரணங்கள் இல்லாத யாரெல்லாம் வரவில்லையோ அவர்கள் எல்லாம் வீட்டிலேயே இருக்கக் சொல்லிவிடுங்கள்,  புதிய நபர்களை ஆர்வம் உள்ள நபர்களை நாம் தேர்வு செய்து பணி வழங்கலாம் என கூறியுள்ளார்.

Also Read : வீட்டு வாடகை பிரச்னையெல்லாம் இனி காவல்துறை விசாரிக்காது - அறிவிப்பு பலகையே வச்சாச்சு!

இதைக் கேட்ட நிர்வாகிகள் அதிர்ந்துபோய் பின்னர் இதுபோன்று இனிமேல் நடைபெறாது என கூறியுள்ளனர். நிர்வாகிகள் வரவில்லை என்றதும் முதல்வன் படத்தில் வரும் காட்சிகள் அண்ணாமலை நடந்து கொண்டதாக தொழில்நுட்ப பிரிவு தெரிவித்தனர். எனவே இனி வரும் ஆலோசனை கூட்டத்தில் எல்லோரும் பங்கேற்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: