முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இதற்குதான் - அண்ணாமலை விளக்கம்

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இதற்குதான் - அண்ணாமலை விளக்கம்

அண்ணாமலை

அண்ணாமலை

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தடை மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவே ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பார் என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் சில விளக்கம் கேட்டிருந்தார்.

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், டிசம்பர் 1ம் தேதி ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று ஆளுநரை சந்தித்து விளக்கமளித்தார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’யாரையோ திருப்திப்படுத்துவதற்காக பிழையான மசோதாவை இயற்றி, ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரை நிர்ப்பந்திக்கூடாது என கூறினார். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தடை மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்வதற்காகவே ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பார்.

புலம்பெயர் தொழிலாளர் பற்றிய வதந்திகள்... கண்காணிக்க குழு அமைத்து டிஜிபி உத்தரவு!

மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்காக ஆளுநர் மாளிகை அளித்த விளக்கத்தை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தினார். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.

First published:

Tags: Online rummy