Home /News /tamil-nadu /

உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்ட ராகுல் காந்தி - அண்ணாமலை விமர்சனம்

உங்களில் ஒருவன் புத்தகத்தை வெளியிட்ட ராகுல் காந்தி - அண்ணாமலை விமர்சனம்

அண்ணாமலை

அண்ணாமலை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

    கோபாலபுரம் இல்லம் போன்று வடிவமைக்கப்பட்ட வீட்டில் இருந்து புத்தகத்தை எடுத்து ராகுல் காந்தி வெளியிட, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்த சுயசரிதை நூலில், மு.க.ஸ்டாலின் அவரது பள்ளி- கல்லூரி காலங்கள், இளமை பருவம், ஆரம்ப நிலை அரசியல் பங்களிப்பு, திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என 1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகளை பதிவு செய்துள்ளார். பூம்புகார் பதிப்பகம்‘ இந்த நுலை வெளிக்கொண்டுவந்துள்ளது.

    இந்த விழாவில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் ஆகியோருக்கு மேடையில் இடமளிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, ராகுல் காந்தி ஆகியோர் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    என்னுடைய ரத்தம் தமிழ் மண்ணில் கலந்துள்ளது: தமிழன் என்று சொல்ல உரிமையுள்ளது - ராகுல் காந்தி

    இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் ட்விட்டர் பதிவில், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்கள். எமர்ஜென்சியில் தான் கைது செய்யப்பட்டதை தமிழ்நாட்டினுடைய இருண்டகாலம் என்று குறிப்பிட்டுள்ளார்.


    இந்திரா காந்திதான் இதைச் செய்தார். அவருடைய பேரன் ராகுல் காந்தி பெருமையுடன் புத்தகத்தை இன்று வெளியிட்டுள்ளார். திமுக - காங்கிரஸ் கூட்டணியை போல எத்தனை முரண்பாடுகள் இவர்களுடைய செய்கைகளில்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Annamalai, Rahul gandhi

    அடுத்த செய்தி