ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு

கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை உள்ளது - அண்ணாமலை பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

Namakkal : திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகியை தாக்கியவர்கள் மீது, இந்த மாத இறுதிக்குள் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நாமக்கல்லில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பூங்கா சாலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் என்.பி. சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் கே.பி. சரவணன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் வி.பி. துரைசாமி, கே.பி. ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பேசுகையில், மத்திய அரசின் 8 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் 45 நாட்களை கடந்த நடந்து வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர் என்று கூறி, மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

அத்துடன், தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்தார். மேலும், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் அதன் அமைச்சர் சேகர்பாபு குறித்தும் அண்ணாமலை கடுமையாக தாக்கிப் பேசினார். அப்போது, கோயில் உண்டியல் மீதே அறநிலையத்துறைக்கு அக்கறை இருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாஜக நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். சம்மந்தப்பட்டவர்கள் மீது இம்மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜூலை முதல் வாரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் காவல் துறையினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவர்.முதல் ஆளாக ஒரு காவல் நிலையத்தை நான் முற்றுகையிடுவேன், இந்த மாநில டிஜிபிக்கு தைரியம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் என்று சவால் விட்டுப் பேசினார்.

இதையடுத்து, மேடையை விட்டு கீழே இறங்கிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். அப்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் பேட்டி கொடுக்க வலியுறுத்தியபோது, அண்ணாமலை அதற்கு மறுத்து காரில் ஏறியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது வாகனத்தின் வேகத்தில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள, அந்த செய்தியாளர் காரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், காரை வேண்டும் என்றே செய்தியாளர் தாக்கியதாக கூறி, 10-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அவரை சூழ்ந்துகொண்டு தாக்கினர்.

Must Read : நீங்களாம் தளபதியைப் பத்தி பேசலாமா தப்பா? மதுரை ஆதீனத்தை கண்டித்து விஜய் ரசிகர்கள் போஸ்டர்..

பின்னர், அங்கிருந்த போலீசார், பாஜகவினரை சமாதானம் செய்து, தாக்குதலுக்கு ஆளான செய்தியாளரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

செய்தியாளர் - ரவிக்குமார், நாமக்கல்

First published:

Tags: Annamalai, BJP, Namakkal