முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி- அண்ணாமலை காட்டம்

பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் நடந்துகொண்டது தமிழகத்தின் கரும்புள்ளி- அண்ணாமலை காட்டம்

அண்ணாமலை

அண்ணாமலை

பிரதமரை மேடையில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய அரசியல் நாடகம் தமிழகத்தில் கரும்புள்ளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு டெல்லி புறப்பட விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் சிடி ரவி மற்றும் சுதாகர் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, ‘அடுத்த கட்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக பிரதமர் மோடி வந்திருப்பதாகவும் ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்பதற்கு சான்றாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்துகொண்டதாகவும் குற்றம்சாட்டினார். கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு என்ன தைரியத்தில் அதனை மீட்டு தர கோரிக்கை வைக்கிறார் என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, திமுக இன்று அரசியல் நாடகத்தை நடத்தி இருப்பதாகவும் அண்ணாமலை பேசினார்.

ஜி.எஸ்.டி குறித்து பேசிய முதல்வர், மத்திய அரசுக்கு தமிழகம் கொடுக்க வேண்டிய தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் அதனை முதலமைச்சர் மேடையில் பேசி இருக்கலாமே எனவும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அரசின் திட்டத்தின் மூலம் வீடு பெறும் பயனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கையைப் பிடித்து, சாவி கொடுக்க வைத்த பிரதமர் மோடி..

முதலமைச்சர் மேடையில் பேசிய அனைத்துமே பொய் எனவும் முன்னுக்கு பின் முரணான தகவலை பேசிவிட்டு திராவிட மாடல் என முதலமைச்சர் கூறுவதாகவும் அண்ணாமலை கூறினார். இன்றைய தினம் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக் கொண்டு முதலமைச்சர் நடந்து கொண்ட விதம் தமிழக சரித்திரத்தில் கரும்புள்ளி எனவும் இலங்கை தமிழர்களின் முதல் விரோதி திமுக தான் எனவும் அண்ணாமலை சாடினார்.

First published:

Tags: MK Stalin, Modi