ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோவை கார் வெடிப்பு சம்பவம்: உளவுத்துறையின் எச்சரிக்கை கடிதம் இருப்பதாக அண்ணாமலை பேச்சு..

கோவை கார் வெடிப்பு சம்பவம்: உளவுத்துறையின் எச்சரிக்கை கடிதம் இருப்பதாக அண்ணாமலை பேச்சு..

அண்ணாமலை

அண்ணாமலை

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதியதாகவும், இந்த கடிதம் மீது மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதாகவும் குற்றம்சாட்டினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் மாநில உளவுத்துறை கடந்த 21-ம் தேதியே கடிதம் எழுதியதாகவும், அந்த ரகசிய கடிதம் தன்னிடம் இருப்பதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பது குறித்து கோவை மாவட்ட பாஜகவினரே முடிவெடுக்க வேண்டும் என்றார். ஆனால், தான் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாகவும் கூறினார். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாஜக சார்பில் வாதிட்டதை திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும் சாடினார்.

  தற்போது கோவையில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் முழு அடைப்பு வேண்டாம் என்று சில சங்கங்கள் தனக்கு கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். மேலும், கோவையில் முழு அடைப்பு நடத்தும்படி பாஜக மாநில தலைமை அழுத்தம் தரவில்லை என்றும், கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மாநில அரசு உத்தரவிடவில்லை என்றால் தானே மக்களை திரட்டி போராட்டம் நடத்தியிருப்பேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

  இதையும் வாசிக்க: பசும்பொன் தேவர் ஜெயந்தி : சென்னை கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணிப்பு – சைலேந்திர பாபு தகவல்

  தொடர்ந்து பேசிய அண்ணாமலை, கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு முன்கூட்டியே கடிதம் எழுதியதாகவும், இந்த கடிதம் மீது மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க காலம் தாழ்த்தியதாகவும் குற்றம்சாட்டினார். இந்த ரகசிய கடிதத்தின் மீது முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்றும் அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Annamalai, Coimbatore, Terror Attack