புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பை காப்பார் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன்.
அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன்.
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். pic.twitter.com/yLtf9LNfAH
— K.Annamalai (@annamalai_k) March 5, 2023
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம், இனம் தொடர்பாக கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்தியப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read : சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி... வந்தது அரசின் புதிய அறிவிப்பு..!
இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்தது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை,வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என சவால் விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.