Home /News /tamil-nadu /

கோவையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த அண்ணாமலை!

கோவையில் துணிகளுக்கு இஸ்திரி போட்டு வாக்கு சேகரித்த அண்ணாமலை!

பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக, அவற்றை குறித்து எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை காமராஜபுரத்தில் இன்று பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை துணிகளுக்கு ஈஸ்திரி செய்து வாக்கு சேகரித்தார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களை கவர்ந்து வாக்குகளை பெற பல்வேறு வியூகங்களை வகுத்து, தினசரி வீடுதோறும் சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாநகராட்சி பகுதிகளான ஆவாரம்பாளையம் மற்றும் காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் பாஜக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையும் படிங்க - அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தால் தமிழகம் சீரழிந்திருக்கும்.. திருமாவளவன் விமர்சனம்

அப்போது, பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி வருவதாக தெரிவித்தவர், அவற்றை குறித்து எடுத்துக் கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், நீட் தேர்வு சமூகநீதியோடு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தவர். சிறுபான்மையின மக்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, காமராஜர்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அங்கு உள்ள ஈஸ்திரி கடைக்கு சென்று துணிகளுக்கு ஈஸ்திரி செய்து கொடுத்து வாக்குகள் சேகரித்தார்.
Published by:Esakki Raja
First published:

Tags: BJP, Coimbatore

அடுத்த செய்தி