ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பீல்டு க்ளியர்... முட்டி அளவு தண்ணீரில் படகு சவாரி - அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

பீல்டு க்ளியர்... முட்டி அளவு தண்ணீரில் படகு சவாரி - அண்ணாமலையை கலாய்க்கும் நெட்டிசன்கள்

அண்ணாமலை

அண்ணாமலை

சென்னையில மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை படகில் சென்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னையில் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழந்துள்ளது. சாலைகள், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாவது நாளாக சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். இன்னும் இரு தினங்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால் சென்னையில் வசிக்கும் மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

இந்தநிலையில், நேற்று தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அண்ணாமலை இன்று சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் தேங்கியிருக்கும் மழைநீரில் அண்ணாமலை படகில் சென்று ஆய்வு செய்தார். அந்தப் பகுதிகளை ஆய்வு செய்த அண்ணாமலை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏவாக இருக்கும் கொளத்தூர் தொகுதியின் தெருக்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலான மக்களின் வீடுகளில் மின்சாரம் இல்லை. பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் நிகழ்வாக உள்ளது’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அண்ணாமலை, கரு.நாகராஜனுடன் இணைந்து படகில் சென்றார். படகு பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக அவர் படகில் உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அண்ணாமலைக்கு அருகில் பலரும் சாலையில் நிற்கின்றனர். அவர்களுக்கு முட்டி அளவு கூட தண்ணீர் இல்லை. எனவே, முட்டி அளவு தண்ணீர் இல்லாத இடத்தில் அண்ணாமலை படகில் சென்று பரபரப்பை ஏற்படுத்துகிறார் என்று நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். அந்தப் படகுப் பயண வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

First published:

Tags: Annamalai, Chennai Rain