ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கேரளாவின் எண்டே பூமி திட்டம் : கம்யூனிஸ்ட் ஆட்சியிடம் மண்டியிட்ட திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்!

கேரளாவின் எண்டே பூமி திட்டம் : கம்யூனிஸ்ட் ஆட்சியிடம் மண்டியிட்ட திமுக அரசு - அண்ணாமலை விமர்சனம்!

அண்ணாமலை

அண்ணாமலை

காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களின் தயவைக் கொண்டு, தன்னுடைய தேசிய பதவிகளுக்கான கனவுகளுக்காக, தமிழக முதலமைச்சர் கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறல்களை அனுமதிப்பதாக கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கேரள அரசு தமிழக எல்லைப் பகுதியில் நில அளவீடு செய்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள அரசு டிஜிட்டல் நில அளவீட்டு திட்டம் “எண்டே பூமி” என்ற பெயரில் தமிழக - கேரள எல்லை பகுதிகளில் நில அளவீடு செய்து, தங்களுடைய கேரள மாநில எல்லைகளை தமிழக எல்லைக்குள் விஸ்தரித்து வருவதை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  2024 லோக்சபா தேர்தல்: திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்? - கமல் சொன்ன சூசக தகவல்!

காலத்தினால் கைவிடப்பட்ட கம்யூனிஸ்ட்களின் தயவைக் கொண்டு, தன்னுடைய தேசிய பதவிகளுக்கான கனவுகளுக்காக, தமிழக முதலமைச்சர் கண்மூடிக் கொண்டு கேரள அரசின் அத்துமீறல்களை அனுமதிப்பதாக சாடியுள்ள அண்ணாமலை, விரைவில் எல்லைப் பகுதிகளில் தானே நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், தமிழகத்தின் ஒரு சதுர அங்குல மண்ணை கூட கேரள அரசு கொண்டு செல்ல தமிழக பாஜக அனுமதிக்காது என்றும் கூறியுள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சிகளும், திறமை இல்லாத திமுக அரசும் ஒருவருக்கு ஒருவர் நட்பு பாராட்டிக் கொண்டு கூட்டணி என்ற பெயரில் மவுனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இதுபற்றி வெள்ளை அறிக்கையை வெளியிடத் தவறினால், தமிழக எல்லையை மீட்பதற்காக பாஜக மிகப் பெரிய போராட்டம் நடத்தும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Annamalai, DMK, Kerala, Tamil Nadu