முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 75வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

75வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி

அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி

ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து, மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. சுதந்திர தினத்தையொட்டி சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதிவரை  அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது முகப்புப் பக்கத்தையும் அவர் மாற்றினார்.

இதேபோல், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வரும் 2022 ஆகஸ்டு 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள "அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகிறார்கள்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Independence day, India, School education department