உலகம் அழிந்தால் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை

புதிய கல்வி கொள்கை பற்றி தான் பேசியது யாருக்கும் தெரியாமல் போய்விட்டதாகவும், அதேசமயம் நடிகர் சூர்யா பேசியது வெளியுலகிற்கு வந்துவிட்டதாகவும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார். 

உலகம் அழிந்தால் மனித இனத்தை காப்பாற்றும் இடமாக நிலவு இருக்கும் - மயில்சாமி அண்ணாதுரை
இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை
  • News18
  • Last Updated: September 6, 2019, 6:25 PM IST
  • Share this:
உலகம் அழியும் நிலையில் மனித இனத்தை காப்பாற்றுவதற்கான இடமாக நிலவு இருக்கும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் வானம் உங்கள் வசப்படும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய லெனின், சென்னை மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்தியுடன் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கழிவறையில் விழுந்து கையை உடைந்துக் கொண்டார்களா? என வினவினார்.


ஆலமரத்தடியில் அமர்ந்து பஞ்சாயத்து செய்வதுபோல, மாணவர்களின் கையை போலீசார் உடைத்திருப்பதாகவும் விமர்சித்தார். இது எளிய மக்களுக்கே நடப்பதாகவும் லெனின் பாரதி குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, தாய் மொழிக் கல்வி அவசியம் என்றார். புதிய கல்வி கொள்கை பற்றி தான் பேசியது யாருக்கும் தெரியாமல் போய்விட்டதாகவும், அதேசமயம் நடிகர் சூர்யா பேசியது வெளியுலகிற்கு வந்துவிட்டதாகவும் கூறினார்.

நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியமான ஹீலியம்-3 வாயு நிலவில் அதிகம் இருப்பதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் நிலவில் மனிதர்கள் தங்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நிலையை மாற்றுவதற்கான அறிவியல் கண்டுபிடிப்புகள் நிச்சயம் ஒரு நாள் வரும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை உறுதிபடக் கூறினார்.

Also see...

First published: July 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading