சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி, அரசு முத்திரையுடன் விழா நடத்தி நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்காக அண்ணா பல்கலைகத்தின் அரங்கத்தை பயன்படுத்தியதாகக் கூறினார்.
நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனத்திற்கும், பல்கலைக்கழகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சிக்கு கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியதாகவும், முதலில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், முன்னாள் நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாக கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால், வள்ளிநாயகத்தை அவர்கள் ஏமாற்றியிருப்பதாகவும் துணைவேந்தர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநரின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Vadivelu, Anna University, Chennai, Vice chancellor