எனது நேர்மையை கமல் புரிந்து கொண்டது மகிழ்ச்சி - சூரப்பா

எனது நேர்மையை கமல் புரிந்து கொண்டது மகிழ்ச்சி - சூரப்பா

துணைவேந்தர் சூரப்பா.

எனது நேர்மையை புரிந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் புரிந்து கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது என்று சூரப்பா தெரிவித்துள்ளார்.

  • Share this:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதிலிருந்தே புதுப்புது சர்சச்சைகள் எழுந்து கொண்டே இருந்தது. சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது என்று அவர் மீது பல்வேறு புகார் எழுந்தது.

இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.சூரப்பா மீது ஊழல் புகார், பணி நியமனங்களில் பணம் பெற்றது, கல்லூரிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடு, தனது மகளை முறைகேடாகப் பணிக்கு அமர்த்தியது, தகுதியற்றவர்களைப் பணி நியமனம் செய்தது குறித்துப் பல்வேறு புகார்கள் தமிழக அரசுக்கு வந்தன. இதையடுத்து தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்தது.

சூராப்பாவை பணியிடை நீக்கம் செய்யவேண்டுமென எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவருக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சூராப்பிவிற்கு ஆதரவாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு இருந்தார். சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? என்று கேள்விக் கேட்டு அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், நேர்மையாக இருந்தால் இது தான் நிலையா. நேர்மையாக இருப்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நான் கேள்வி கேட்பேன் என்று ஆவேசமாக பேசியிருந்தார்.இந்நிலையில் தனக்கு ஆதரவாக பேசிய கமல்ஹாசனுக்கு சூரப்பா நன்றி தெரிவித்துள்ளார். மேலும், என்னுடைய நேர்மை, அர்ப்பணிப்பு, கல்வித்துறைக்கான எனது சேவையை கருத்தில் கொண்டு ஆதரவளிப்பது என்பது எனக்கான ஆதரவு அல்ல, இந்த நாட்டின் எதிர்காலத்திற்கான ஆதரவு அது.

நான் பஞ்சாப் ஐஐடி இயக்குநராக பணியாற்றியபோது, அப்போதைய முதல்வர் ப்ரகாஷ் சிங் பாதல் ஐஐடியில் பஞ்சாப் மாணவர்கள் இடம்பெற என்னென்ன கல்வி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என என்னிடம் ஆலோசனை கேட்பார் ; ஆனால் தமிழகத்தில் அதுபோன்று எதுவும் நடக்கவில்லை.

நான் பணியாற்றிய அனைத்து இடங்களிலும் எனக்கு நற்பெயரே உள்ளது. என் மீதான புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனில் இருந்து எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: