கிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை தயாரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!

தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 25 புதிய ஆளில்லா விமானங்களை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது

கிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை தயாரிக்கும் அண்ணா பல்கலைக்கழகம்!
25 புதிய ட்ரோன்
  • Share this:
கொரோனா தொற்று காரணமாக கிருமி நாசினி தெளிக்க 25 ட்ரோன்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்க உள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தட்டுப்பாடு காரணமாக 5 கோடி ரூபாய் செலவில் 25 புதிய ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளில் மிக முக்கிய பணியாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்த ஆளில்லா விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன இந்த சூழலில் போதிய எண்ணிக்கையில் ட்ரொன்கள் இல்லாத நிலையில், தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 25 புதிய ஆளில்லா விமானங்களை தயாரிக்க அண்ணா பல்கலைக் கழகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை எம்ஐடி வளாகத்தில் உள்ள வானூர்தி துறையின் மூலம் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளது. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட 6 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இது போன்ற ஆளில்லா விமானங்கள் தேவைப்படுகிறது. ஆனால் போதிய எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்கள் இல்லாத நிலையில், கொரோனோ நோய் பரவலை சமாளிக்க கூடுதலாக 25 புதிய ஆளில்லா விமானங்களை தயாரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது .

மாநில பேரிடர் நிர்வாக துறை சார்பில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு இதற்காக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது . இதன் மூலம் 25 ஆளில்லா விமானங்களை விரைவில் அண்ணா பல்கலைக்கழகம் தயாரிக்க உள்ளது.Also see...
First published: April 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading